அரிவாள் ஏன் எடுத்தேன்

வழக்காடு மன்றத்தில்
வழக்கொன்று !

பெற்றோரை பேணுவது
யார் பொறுப்பு?

மூன்று மகனும்
இரண்டு மகளும்
பெற்ற மகராசன்

தள்ளாடும் வயதில்
வழக்காடு மன்றம்
வந்து நின்றார்!

வாய்தா கொடுத்து கொடுத்து
அல்வா கொடுத்தது நீதிமன்றம் !

இடுகாட்டு மரத்தில்
தூக்கில் தொங்கினார்
ஐந்து மக்களை பெற்ற
மகராசன்!

தூக்கி போடுவது யாரென்று
வழக்கொன்று வருமென்று !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
* * *

எத்தனையோ தேர்தல்
வந்தது!

ஏழைகளின் தோழன்
என்றான் ஒருவன் !

வீட்டுக் குழாயில்
பால் வருமென்றான் ஒருவன் !

அவனையும் இவனையும்
நம்பி வாக்களித்தான்
விவசாயி!

காவிரியும் வைகையும்
களவு போனது !

ஒட்டு போட்டவன்
உயிர் மாய்ந்து போனது !

* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !

* * *

வீடு கட்ட கடன்
என்று வங்கி வந்தான் ஒருவன் !

முன்பணம் கட்ட
கடன் வாங்கினான் !

இன்று போய் நாளை வா!
வங்கி வாசகம் !

ஒட்டுவீடும் ஏலத்துக்கு வந்தது
வீடுகட்ட நினைத்தவன்
ரோட்டுக்கு வந்தான்!
* * *
இதனால்
* * *

களவு போனதென்று
காவல் நிலையம் சென்றான் !

களவு கண்டுபிடிக்க
கைக்கூலி கொடுத்து கொடுத்து
கடனாளி ஆகி நின்றான் !

* * *
இதனால்
* * *

மது வீட்டுக்கும் நாட்டுக்கும்
கேடு !
அரசாங்கம் அனுமதியோடு !

* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !

யாரை முதலில் வெட்ட ?

எல்லாரும் குற்றவாளிகள் !

எங்கே அந்த கடவுள் !
அவனைத்தான் முதலில்
வெட்டவேண்டும் !

@ @ @/

எழுதியவர் : கோடீஸ்வரன் (30-Jul-14, 8:20 pm)
பார்வை : 109

மேலே