கற்பனைதான் கவிஞன் மூலதனம்

பகலில் நிலவை தேடும்

கண்களின் ஆசை புரியும்

நிலவும் தேய்வது காதலாலோ

வானவீதியில் நடைபயிலும்

ஒரு சின்ன தாரகை

என் வெண்ணிலவோ

விடுமுறை நிலவு எடுத்தால்

அதன் விதிமுறை மாற்றம் கொடுத்தால்

வானவில் வருமோ வந்தால்

மனம் ரசிக்காமல் விடுமோ

கற்பனைதான் கவிஞன் மூலதனம்

அதற்க்கு எல்லை வகுப்பது அறிவீனம்

ரசித்துப்பார் புதுப்பார்வை கொண்டு

உன்னை நெருங்காது பலவீனம்

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 7:44 pm)
பார்வை : 71

மேலே