கவிதைகள் நிரம்பிய பை

தனிமையில் இயற்கையை ரசித்தேன்
தவநிலை அதுவெனப் புரிந்தது.........!
இளமையில் கடமையை மதித்தேன்
இனிமையே அதுவெனப் புரிந்தது....!
முதுமையில் நானென்பதை மறந்தேன்
முக்தி நிலை அதுவெனப் புரிந்தது...!
அதோ......அதோ......
தூரத்தில் காற்றோடு கலந்தேன் - அது
துலங்காது புற விழிகளுக்கு எனப் புரிந்தது...!!
இப்படிக்கு......
காற்றில்லாத வெறும் பை......!!
( எனினும் நாலு பேராவது வேண்டும்
என் கனத்தை தூக்க......!! )