மண்ணில் தவழும் என் மடி மீன் o0o தாய்ப்பால் தின போட்டிக் கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணில் மணி என காப்பேனடி நான்
தாய் மடி பாலென் மழலைக்கு ஊட்டி
நோய் பிடி சிக்காது வளர்ப்பேன் சீராட்டி!!!

மடிந்திட்ட தாயின் மழலைக்கென் பாலினை ஈந்தேன்
துடித்திட்ட மழலையின் பசி போக்கியே மகிழ்ந்தேன்
தாயின் மடிப்பால் அபரிதம் என்றோர் கேளீர்
சேயின் பசியாற்றிட தாய்ப்பால் தானங்கள் செய்வீர்!!!

எழுதியவர் : சொ. சாந்தி (1-Aug-14, 12:49 pm)
பார்வை : 256

மேலே