சல்லும் ஜொள்ளும்

சல்லும் ஜொள்ளும்

கொங்குத் திருநாட்டின்
ஒருசில பகுதிகளில்
வாயிலிருந்து வடியும்நீரை
சல்லு என்று சொல்வார்கள்.

மழலையர்க்கும் வாயைப்
பிளந்து கொண்டு
வேடிக்கைப் பார்ப்பவர்க்கும்
வாயிலிருந்து நீர்வடியும்.

எதிர்பாலர் எதிர்படும்போது
ஆவல்பொங்க நோக்குவோரை
“சல்லொழுகப் பார்க்கின்ற
பார்வையைப் பார்”என்பர்.

கொங்குநாட்டு சல்லுதான்
சென்னைச் செந்தமிழில்
ஜொள்ளாக மாறியதோ?
திரைநெறியாளர் செய்யும்
மாற்றத்தில் இதுவுமொன்றோ?

அசால்ட்@ என்றசொல்
ஆங்கில மொழியில்
கடுமையாகத் தாக்குதல்
என்ற பொருள் கொண்டிருக்கும்.

அசால்ட்டைத் திரையாளர்
கையாளும் விதமெல்லாம்
நாமெல்லாம் அறிந்ததே.
சல்லும் ஜொள்ளும்
இவ்வகையில் பிரிந்ததோ?

உயர்கல்வி கற்றுப்
பெரும்பதவி வகிப்போரும்
அசால்ட்டை அசால்ட்டாய்ப்
பயன்படுத்தும் நிலைகண்டோம்.




@ ASSAULT = to attack somebody violently, especially when this is a crime. The crime of attacking somebody physically. Oxford Advanced Learner’s Deictionary 7th Edition. Page: 77.
1. A significant number of indecent assaults on women go unreported.
2. He has been charged with assaulting a police officer.
சலம் என்றால்
நீர் என்று பொருள்.
சலம் தான் சல்லாகி
ஜொள் ஆனதோ?

எழுதியவர் : மலர் (2-Aug-14, 12:05 pm)
பார்வை : 105

மேலே