திரை நடனம்

சுளுக்கு எடுப்பவர் போல்
ஜன்னி வந்தவர் போல்
(சில சம்யம் அரைகுறை ஆடையில்
ஜோடியாக அல்லது கும்பல் கும்பலாய்)
பல்டி அடித்து
தாண்டிக் குதித்து
குனிந்து நிமிர்ந்து
கட்டிப் பிடித்து
எட்டிக் குதித்து
காலைத் தூக்கி
கையை வீசி
கையை இழுத்து
கழுத்தைத் திருப்பி
தலையை ஆட்டி
இசைக் கருவிகளின்
ஓசையோடு மனிதக்
குரலையும் கலந்து
எழுப்பபடும் பலத்த
ஒலிக்கு பலவிதமாய்க்
கண்ட இடங்களில்
செய்யும் நல்ல உடற்பயிற்சி.