தமிழ் எனும் தங்கச் சிலை
எழுத்து அழகிய வலை !
அமுதத் தமிழ் அலை !
கணினி தந்த
கவிதைக் கலை !
தென் திரை முத்துக்கள்
சிந்திடும்
சிந்தனை வலை !
எண்ண அலைகள் எழுச்சியில்
உயர்ந்து நிற்கும்
பொதிகைத் தமிழ் மலை !
தாழ்ந்த எண்ணங்களுக்கும்
போட்டி பொறாமைகளுக்கும்
காழ்ப்பு கசப்பிற்கும்
கட்சிப் பிரசாரங்களுக்கும்
இங்கே இடம் இலை !
அன்பு மனங்களும்
நட்பு உள்ளங்களும்
கைகோர்த்து நாளும்
வளர்க்கும் பூமலர்
புதுமைத் தோட்டம்
எழுத்தெனும்
இலக்கிய வலை !
என்றும் இங்கே
நிலை பெற்றிருப்பவள்
தமிழெனும் தங்கச் சிலை !
------கவின் சாரலன்