ஒரு ஊர்ல ஒரு கண்டக்டர்

ஒரு ஊர்ல ஒரு கண்டக்டர் இருந்தாராம் ....

ரொம்ப மோசமான கண்டக்டராம்......

ஒருநாள் ஒரு அழகான பொண்ணு அவரோட பஸ்ல ஏறி வரதுக்குள்ள

அவரு விசில் அடிச்சிட்டாரு .. அதனால அந்த பொண்ணு தவறி விழுந்து செத்து போய்டரா ....

உடனே பஸ்ல இருக்கற எல்லாருமா சேர்ந்து அவர போலீஸ்ல புடிச்சி கொடுக்கறாங்க ....

போலீஸும் கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தறாங்க.......

கோர்ட்ல இருதரப்பு வாதத்தையும் கேட்டு முடிச்ச நீதிபதி

அந்த கண்டக்டர்க்கு கரண்டு ஷாக் கொடுங்கன்னு தீர்ப்பு சொல்றாரு ...

உடனே கண்டக்டர ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய் கரண்ட் ஷாக் கொடுக்கறாங்க .....

ஆனா கண்டக்டர்க்கு ஒண்ணுமே ஆகல ..... சிரிச்சிட்டே வீட்டுக்கு போய்ட்ராரு......

திரும்பவும் டுட்டில சேர்ந்து வேலை செய்றாரு ......

ஆனாலும் திருந்தாம பழையபடியே மோசமான கன்டக்டராவே இருக்காரு

திரும்பவும் ஒருநாள் ஒரு அழகான பெண்மணி அவரோட பஸ்ல ஏறி வரதுக்குள்ள

அவரு விசில் அடிச்சிடறாரு .. அதனால அந்த பெண்மணியும் தவறி விழுந்து செத்து போய்டராங்க ....

உடனே பஸ்ல இருக்கற எல்லாருமா சேர்ந்து அவர மறுபடியும் போலீஸ்ல புடிச்சி கொடுக்கறாங்க ....

போலீஸும் கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தறாங்க.......

கோர்ட்ல இருதரப்பு வாதத்தையும் கேட்டு முடிச்ச நீதிபதி

அந்த கண்டக்டர்க்கு மறுபடியும் கரண்டு ஷாக் கொடுங்கன்னு தீர்ப்பு சொல்றாரு ...

திரும்பவும் கண்டக்டர ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய் கரண்ட் ஷாக் கொடுக்கறாங்க .....

ஆனா போனதடவ மாதிரியே இந்த தடவையும் கண்டக்டர்க்கு ஒண்ணுமே ஆகல ..... சிரிச்சிட்டே வீட்டுக்கு போய்ட்ராரு.......

வீட்டுக்கு போய் ரொம்பவே யோசிச்சி திருந்தி இனிமே நாம நல்ல கண்டக்டரா ஆகனும்னு முடிவு எடுக்கறாரு. அது படியே ரொம்ப நல்ல கண்டக்டராவே மாறிட்டராரு .

அப்ப ஒருநாள் ஒரு வயதான பெண்மணி அவரோட பஸ்ல ஏறும் போது தவறுதலா

விழுந்து செத்து போய்டராங்க .... இந்த தடவ அந்த கண்டக்டர் மேல எந்த தப்புமே இல்ல ஆனாலும்

பஸ்ல இருக்கற எல்லாருமா சேர்ந்து அவர மறுபடியும் போலீஸ்ல புடிச்சி கொடுக்கறாங்க ....

போலீஸும் கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தறாங்க.......

மறுபடியும் அதே கண்டக்டரரையே பார்த்த நீதிபதி விசாரணையே பண்ணாம

அந்த கண்டக்டர்க்கு மறுபடியும் கரண்டு ஷாக் கொடுங்கன்னு தீர்ப்பு சொல்றாரு ...

திரும்பவும் கண்டக்டர ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய் கரண்ட் ஷாக் கொடுக்கறாங்க .....

ஆனா இந்த தடவ அந்த கண்டக்டர் பரிதாபமா ஷாக் அடிச்சி செத்து போய்டராரு.....

எல்லாருக்கும் அதிர்ச்சி ...... இவர் எப்படி செத்தாருன்னு .....? .........

ஆனா யாராலுமே கண்டுபிடிக்க முடியல ............

உங்களுக்கு தெரியுமான்னு நீங்க என்கிட்ட கேட்கறது எனக்கு கேட்குது ....சரி சரி ........

முதல் ரெண்டு தடவ அவருக்கு ஷாக் கொடுக்கும் போது அவர் மோசமான கண்டக்டர் அதாவது

இங்கிலீஷ்ல சொல்லனும்ன அவர் ஒரு ( BAD CONDUCTOR) .... அதனால தான் அப்ப அவருக்கு ஷாக்

அடிக்கல ..... ஆனா மூணாவது தடவ அவருக்கு ஷாக் கொடுக்கும் போது அவரு ஒரு நல்ல கண்டக்டர்

அதாவது இங்கிலீஷ்ல சொல்லனும்ன அவர் ஒரு ( GOOD CONDUCTOR) .... அதனால தான் அவருக்கு

ஷாக் அடிச்சுது ...


ஐயோ என்ன அப்படி பார்க்காதீங்க பயமா இருக்கு .....

எழுதியவர் : கலைச்சரண் (2-Aug-14, 6:26 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே