கவிஞனுக்கு எது மரணம்
ஒரு கவியின் மரணம்
மண்ணில் புதைவதல்ல
மக்கள் மனங்களில்
வாழ்வதே .!!
ஒப்பாரிகளின் ஊஞ்சல்களில்
ஆடி ஓய்வதில்லை-
ஒரு நட்பின் விழிவழி
நீர்த்தளும்பலின் பிரதிபலிப்பு.
பூ,காற்று,நாற்று,நிலவொளி
இவற்றில் கலந்து கரைவது
கவியின் மரணம்.
ஒரு நாளின் தாளாய்
கிழிந்து பறப்பதில்லை.
அனுபவங்களின் கல்வெட்டாய்
யுகங்களில் வாழ்வது கவியின் மரணம்
பளிங்குக்கல் போர்வையாய்
கல்லறையாய்
மாற்றாதீர் கவியின் மரணத்தை
உங்கள்
நிகழ்வுகளின்,நினைவுகளின்
சிறு கீற்றாய்
ஒரு நொடியாவது
இருந்தால் அதுவே கவியின் மரணம்
இருக்கும் போது
இறந்திருந்த கவி
இறந்தப்பின்
உங்களில் வாழ்ந்தால்
அதுவே கவியின் மரணம்