நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

எதிர்பார்க்கும்
உறவுகளிடையே
எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல்
துணிவை மட்டும்
துணையாக கொண்டு
எதையும் எதிர்நோக்கும்
தன்னம்பிக்கை - நட்பு...!

உலகம் தோன்றிய
கற்காலம் முதல்
பல நாகரிக மாற்றகளிலும்
என்றும் துவளாத
மாறாத - நட்பு...!

தலைச்சிறந்த
உறவு பட்டியலில்
முதலிடத்தை
பல நூற்றாண்டுகளாக
தன்வசம் வைத்திருக்கும்
ஆதீக்க - நட்பு...!

உயிரிடையில்
மழைக்காலம் போல்
றும் மகிழ்ச்சி நிறைந்த
சாளர வழி பார்க்கும்
சாரல் அழகு - நட்பு...!

விழியின் துளிகளை
விளிம்புகளில் துடைக்கும்
வருத்தமில்லா
வாசமிகு - நட்பு...!

இன்பம்
துன்பம்
எதுவாக இருந்தாலும்
நண்பர்கள் செலவில்
மகிழும்
உன்னத treat 🍨 - நட்பு...!

தவிப்புகள் நிறைந்த
தன்னலமில்லா
தனிமைப் பிரிவுகளில்
விழி நனையும்
துளிக் கவிதை - நட்பு...!

மழலை முதல்
மரணம் வரை
மனம் விரும்பும்
தொடரும்
என்றென்றும் - நட்பு...!


உலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : கோபி‬ (3-Aug-14, 12:04 pm)
பார்வை : 416

மேலே