+நட்பு நட்பு நட்பு+

நட்பு நட்பு நட்பு
இதைச் சொல்ல இல்லை வார்த்தைகளே
நட்பு நட்பு நட்பு
இது இல்லா வாழ்க்கை அர்த்தமில்லை

புயலில் தவிக்கும் வேளை
படகாய் வந்து காக்கும் நட்பு
படகில் தவிக்கும் வேளை
துடுப்பாய் வந்து சேரும் நட்பு
இரண்டும் இல்லா நேரம்
நீந்தி வந்தே உதவும் நட்பு
வரண்ட பூமியில் கூட‌
பசுமைப் பூவாய் பூக்கும் நட்பு

நட்பு நட்பு நட்பு
இதைச் சொல்ல இல்லை வார்த்தைகளே
நட்பு நட்பு நட்பு
இது இல்லா வாழ்க்கை அர்த்தமில்லை

இதயம் அழுகும் நேரத்திலே
உதயம் ஆவது பள்ளி நட்பு
விடலை பருவ வாசலிலே
விடாமல் தொடர்வது கல்லூரி நட்பு
கடைசி வரைக்கும் பிரியாமல்
கைகோர்த்து வருவதே உண்மை நட்பு
உயிரைக் கொடுக்கத் தயங்காமல்
உள்ளம் சேர்வதால் நன்மை நட்பே!

நட்பு நட்பு நட்பு
இதைச் சொல்ல இல்லை வார்த்தைகளே
நட்பு நட்பு நட்பு
இது இல்லா வாழ்க்கை அர்த்தமில்லை

பணம் விட்டுப் போனாலும்
மனம் விட்டுப் போகாது நட்பே!
உறவு தள்ளிப் போனாலும்
உரிமையுடன் பாசம் கொடுக்கும் நட்பே!
தேள் கொட்டும் துன்பத்திலும்
தேன் சொட்டும் இன்பம் நட்பே!
மண் போகும் நேரத்திலும்
மனம் ஒத்திருந்தால் அதுதான் நட்பே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Aug-14, 2:12 pm)
பார்வை : 930

மேலே