என்னோடு போர் புரிய வா தோழமையே

என் தாயிடம் சொல்லாததையும்..
உன்னிடம் சொல்லியிருக்கிறேன்...!

என் தந்தையிடம் கேட்காததையும்...
உன்னிடம் கேட்டிருக்கிறேன்...!

என் உடன் பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாததையும்...
உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன்...!

என் ஆசானிடம் கற்காததையும்..
உன்னிடம் கற்றிருக்கிறேன்...!

என் விரல்கள் அறியாத கண்ணீரைக்கூட...
உன் கரம்தானே துடைத்தது...!

என் காதல் தெரிந்துக்கொள்ளா வலிகளைக்கூட...
உன் மனம் அல்லவா தெரிந்துக்கொண்டது...!

என்னால் தாங்க முடியாதச் சுமைகளையும்..
உன் அன்பு அல்லவா சுமந்தது...!

சில உண்மைகளை மறைத்து..
பல பொய்களை உரைத்தால் மட்டுமே
நிலைக்கும் நம்முடைய உறவுகள்..!

என் உண்மைகளை முற்றிலும் அறிந்தும்..
நிலைப்பதுதானே தோழமை..!

பார்க்காமலேயே நேசிக்கத் தொடங்கிவிடும் காதல்...
ஒருவேளை தோல்வியில் முடியலாம்...!

முகம் அறியாது தோழமைப் பாராட்டும் - நம்
தள நண்பர்களின் அன்பு என்றும் தோற்காது...!

ஆயுதம் ஏந்தி என்னோடு போரிட வருவோர்...
ஒருவேளைத் தொற்றுப்போகலாம்...!
ஆனால்,
என் மனதோடு நட்பைக்கொண்டு போரிட வந்தால்...
வெற்றி உங்களுடையதே...
தோற்பதில் எனக்கு மகிழ்ச்சியே...!

"என் தோழமையே "

எழுதியவர் : மணிமேகலைமணி (3-Aug-14, 2:52 pm)
பார்வை : 106

மேலே