நண்பன்

அழகிய மலர்கள் சோலையில்
ஆருயிர் நண்பர்கள் அகிலத்தில்

அன்னையின் வடிவிலும் நண்பன்
அன்பின் உருவிலும் நண்பன்

தக்க துணையும் கொடுத்திடுவான்
தன் தோள் மீதும் சுமையை தாங்கிடுவான்

உற்ற வேளையில் உணர்த்திடுவான்
உன் உள்ளம் கொள்ள இனித்திடுவான்

நண்பனுக்கு நண்பன் தான் ஈடில்லை
நற்குணமும் நல்லுறவும் நண்பனிடம்

தன்னிடத்தில் ரகசியங்கள் ஏதுமில்லா
தரணியில் வாழும் புகழ் நண்பனுக்கே

உந்துகின்ற எண்ணம் எல்லாம் உரைத்திடுவான்
உள்ளத்திலே எதுவுமில்லை நண்பன் மட்டும்

உழைப்புக்கு வழிகாட்டி உன்னதமாய் வாழ
ஊக்கமத்தை தந்திடுமே நண்பன் செயல்

நண்பனுக்கு நண்பன் நட்பின் செல்வர்
நலமும் பண்பும் நல்கிடும் செல்வத்தின் செல்வர்

எழுதியவர் : பாத்திமா மலர் (3-Aug-14, 3:08 pm)
Tanglish : nanban
பார்வை : 192

மேலே