நதியானவள் சதியால் வீழ்கிறாள்

நீல சேலையுடுத்தி கண்கவர்ந்தாய்
கால்கள் வலிக்க நீ நடந்து மண் கவர்ந்தாய்!!

செல்லும் இடமெங்கும் பசுமைபூந்தோட்டம்
இரவிலுறக்கம் என்பதின்றி தினமும் உன் ஓட்டம்...!

கனவு காதல் நிஜமாக கடலை நோக்கிய உன் பயணம்
வாழும் உயிர்க்கெல்லாம் நன்னீர் தந்து கண்ணீரில் கலந்தே உன் சயனம் !

உன்னுள் துள்ளும் உயிர்கள் ஆயிரமாயிரம்
மண்ணுள் மடியும் உயிர்களும் உன்னுள் கரைந்து
சலசலப்பினூடே சலனமற்று தவழுது உயிர்!

பல உயிர்க்கு தாயாய் !!
கண்கண்டவர்க்கு கொடையாய்..!நீ !

நங்கையாய் என்றென்றும் இளமை மாறாத மங்கையாய்
ஆதவன் மெய்மறக்க சதி செய்து
மண் மணக்க மழைதந்து
மண்வாசனையை உன்மேனியோடு அணைத்தவளே !

உற்சாகத்தின் துள்ளலாய்...
பள்ளத்தை மேடாக்கி
உள்ளமெனும் பள்ளத்தில் விழுந்தோடும் நதியே !

உன்மேனியின் துகிலுரிந்தவன் யாரடி?
உன்னழகையழித்து தன்னை சாய்த்த சூரன் யாரடி ?

எலும்பினூடே சதையை தேடும் நாய்கள் மேலடி
உன் மேனிக் கண்டு உள்ளம் நடுங்குதடி !!

புற்றுநோயை உன்னுள் புதைத்து
புன்னகையை எனக்கு தர
நீலப் புடவை உடுத்தியவள் நீயே!!

அதை கண்டு கண்ணீர் மல்குதடி
நல்லோரை சூழ்ந்த நயவஞ்சக
நரிகள் கூட்ட நடுவினிலே நதியாய் நீயடி!!

இன்றும் வற்றாது வரைபடத்தில்
உன் அழகு மிளிர்ந்தோடுதடி!

பிறர் வாழ உன்னை தந்தாய்
நீ வாழ உயிர் தரும் ஓருயிரும் ஏதடி!!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Aug-14, 6:22 am)
பார்வை : 91

மேலே