மழை

பூமி என்ற காதலியின்
மலடை
நீக்க வந்த
வானம் என்னும் காதலன்
தந்த கரு

இல்லை !

சூரியனுக்கும் , கடலுக்கும்
பிறந்த கர்ணன்

இல்லை !இல்லை

காதலனும், காதலியும்
டூயட் பாட
ரியல் டைரக்டர்
கடவுள் தந்த
லைட்டிங் எபக்ட்

உண்மையல்ல !

குடிசை விஞ்சானியின்
கப்பல் ஆராய்ச்சி
திட்டம்

எனெகென்னவொ!

மனிதனை ,மனிதன்
மதம் , இனம் , மொழி , சாதி
பேதத்தால் அழித்து கொல்லும்
வேதனையை பொறுக்காமல்
இயற்கை தாய் விடும்
கண்ணீரோ

என்ன இருந்தாலும் !

மழை சமதர்மவாதி
இல்லை தான்
பீகார் இல் வெள்ளம்
பிறந்த ஊரில் பஞ்சம்

யோசித்துகொண்டே இருக்காமல் !

மழையை
அமைதியாக
அனுபவி
ஆனந்த கூத்தாடு
மழை நம் கண்ணுக்கு தெரிந்த கடவுள்!

எழுதியவர் : mn பாலமுரளி (4-Aug-14, 10:47 am)
சேர்த்தது : mn balamurali
Tanglish : mazhai
பார்வை : 141

மேலே