நவீனம் அளிழித்த ஆரோக்கியம்

..."" நவீனம் அ(ளி)ழித்த ஆரோக்கியம் ""...

தட்டி அரைத்து அம்மிக்கல்லில்
கூட்டி குலைத்து குலம்புவைத்து
கும்மென்று மணத்த காலம்மாறி
ஆட்டியரைத்த ஆட்டுக்கல்லும்
முற்றத்திலே தனக்கு இடமின்றி
தனிமையோடே அனாதையாச்சு
நெல் குத்தி அரிசியினை பிரித்தெடுத்த
அந்த உரலோடு உலக்கையுமின்று
தன்னுருவம் அழிந்தே மறைந்துபோச்சு
ஆயிரம் வசதியிங்கு வாசல்தேடி
வந்தபோதும் ஏனோ அரக்கப்பறக்க
நாம் அல்லல்படுவதே வழக்கமாச்சு
நிம்மதியாய் குத்தவைக்க நேரமின்றி
சுருங்கிவிட்ட வாழ்க்கையாச்சு
புதுமையைதேடி இளமைபோக்க
ஆடம்பர வசதியிங்கு அதிகமாக
வாலிபம(லி)ழிந்தே வயோதிகமாச்சு
வசதிகளால் சிரமம் குறைந்துபோச்சு
நோய் நொடிகளே நமக்கு மிச்சமாச்சு
ஆயிரம் வசதிகளின்கு அவசரமாய்
அகிலத்தில் அவதாரங்கள் எடுத்திட
ஆரோக்கியம் மொத்தம் அழிந்துபோச்சு
காளைய(வன்)டக்கி இளவட்ட கால்தூக்கி
கன்னியரை கவர்ந்தன்று மணந்தவனோ
இல்லாத பெயர்சொல்லி இருக்கின்ற
நோய்யாவும் இருப்பதாய் சொல்லுகிறான்
நோகாமல் ஒன்பதன்று பெற்றெடுத்தாள்
ஒன்பது தீருமுன்னிவள் அறுத்தெடுத்தாள்
நவீனத்தால் பெற்றிட்ட நன்மைகள்யாவும்
உடல் நலகுறைவே நாம்பெற்ற இலாபம் ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (4-Aug-14, 10:36 am)
பார்வை : 113

மேலே