மதம்
எரிந்த சாம்பலை
வைத்து
மதக்கோட்டைகள்
கட்டுகிறார்கள்
எரிந்தவன் குடும்பம்
என்ன என்ன
மனக்கோட்டை கட்டியதோ
சாத்தானை ஒழிக
என்றிடலாம்
மாற்றானை ஒழிக்க
எண்ணிடல் ஏன்
கூண்டுக்குள் கடவுளை
கட்டிவிட்டு நீ
கட உள்ளே என்று
சொல்லுகிறாய்
உன் மெய்யை கடந்து
உள்ளே சென்றால்
உன் மனம் கூட
கடவுளடா
வன்மையை கையில்
கொண்டவனே உனை
உன் மனம் ஓர்நாள்
கொல்லுமடா