எம்மதமும் சம்மதமே
எம்மதமும் சம்மதமே…
மண் நனைக்கும்,
மழைக்கு;
எம்மதமும் சம்மதமே…
உயிர்க் காற்று அருளும்,
மரத்திற்கு;
எம்மதமும் சம்மதமே...
ரமலான் பிரியாணி கேட்கும்,
நாவிற்கு;
எம்மதமும் சம்மதமே…
ரத்தம் கேட்கும்,
அறுவை சிகிச்சைக்கு;
எம்மதமும் சம்மதமே…
பிணம் உண்ணும்,
மண்ணுக்கு;
எம்மதமும் சம மதமே…
சம்மதமில்லை எனில்,
நீ வாழ
எனக்கு சம்மதமில்லை.