ஹோட்டலே பள்ளியாய்
நானும் படிக்கிறேன்...
முதலாளி அடிக்கும்பொழுது
'அம்மா' என கத்துவதில்
"தமிழையும்"...
தவறு செய்யும்பொழுது
'சாரி சார்' என கூறுவதில்
"ஆங்கிலத்தையும்"...
பொட்டலம் போடும்பொழுது
'நான்கு இட்லி, இரண்டு வடை' என எண்ணுவதில்
"கணக்கையும்"...
சமைப்பதற்கு மளிகைக்கடையில்
'பொருட்கள்' வாங்கும்பொழுது
"அறிவியலையும்"...
வாடிக்கையளர்களுக்கு
உணவை 'விற்கும்பொழுது'
"வணிகவியலையும்"...
கற்கிறேன்...
கவலைப்படாதே அம்மா...
நானும் படிக்கிறேன்!!!