தனிமையில்

சிதறிக்கிடக்கும் உனக்கான என் எழுத்துக்கள்

உன் இதழ்கள் வாசித்தால் மட்டுமே முழுமை பெரும்...

என் கனவுகள் கூட கண் மூடிக்கொண்டது

உன்னை காணாதபோது...

ஆறுதல் சொல்ல ஆளின்றி "குலுங்கி குலுங்கி" அழுகின்ற

என் இமைகளுக்கு, என் விரல்கள் மட்டுமே ஆறுதல்...

என்னவளே!

உன்னை தேடிச்சென்று கட்டிக்கொள்ள ஆசை தான்,

ஆனால்,

உன்னை எங்கு சென்று தேடுவேன்!..

போகும் முகவரி கூட சொல்லாமல்...

நிம்மதியாக, "நீ" மட்டும் கண்ணயர்ந்தாய்....

உன் கல்லறையில் பூக்களாக மட்டுமே நான்....!


இப்படிக்கு
- சா,திரு -

எழுதியவர் : சா.திரு (6-Aug-14, 2:21 am)
Tanglish : thanimayil
பார்வை : 97

மேலே