அக்கரை வெளிச்சம் – கே-எஸ்-கலை

ஈழத்தைப் பார்த்து
எக்காளமிட்டவன் -
ஈராக்கைப் பார்த்து
கண்ணீர்ச் சொரிகிறான் !

காஸாவின் கொடூரம்
கண்களைக் கிழித்தாலும்
நாசமாய்ப் போனவன்
கைகளைத் தட்டுகிறான் !

ஐக்கியத்தை மென்று
உயிர்களைத் தின்று
சமத்துவம், சமாதானம்
எல்லாம் கொன்று
பிரிவினையும் வன்முறையும்
உடல் வளர்த்துக் கிடக்கின்றன !

சொந்த சாதிக்காரனின்
சொந்த இனத்துக்காரனின்
சொந்த மதத்துக்காரனின்
சாவின் போது மட்டுமே
ஒவ்வொரு துவேசியும்
ஐக்கியத்தை தேடுகின்றான் !
------
பிரிவினைக் கடலின்
அகலம் அதிகம்....

இனம் துறந்து
மதம் மறந்து
சாதிகள் எரித்து
இறக்கைகள் விரித்து
மனிதனாய் மட்டும் பற...

அடுத்தக் கரையில்
காத்திருக்கிறது
ஐக்கியமும் சமத்துவமும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-Aug-14, 9:33 am)
பார்வை : 159

மேலே