நண்பன் டா....

செமஸ்டர் தேர்வில் ரெண்டு பாடம் ஹரியர்
அம்மா சொன்னாள்
என்னதான் பண்ண போறியோ
பாஸ் ஆக முடியல
மானம் போகுது....
அப்பா நீ உருப்பட மாட்ட..
வாத்தியார் எதுக்குடா வர்ற
மாடு மேய்க்க போக வேண்டியது தானே
இத்தனையும் கேட்டு
கொஞ்சம் கவலை தேய்ந்த முகம்
அதிலும் ஒரு ஆறுதல்
மச்சான் உனக்காவது ரெண்டு
எனக்கு நாலுடா
அடுத்த தடவை பாஸ் ஆயிடுவோம்டா
பீல் பண்ணாத மச்சி ....
இது தான் நண்பன் டா......

எழுதியவர் : தமிழ் (18-Mar-11, 7:40 pm)
சேர்த்தது : sarah geneema
Tanglish : nanban taa
பார்வை : 353

மேலே