கதைக்குள் கதை - மணியன்

ரேடியோ நாடகம்
===============

ஒரு காட்டுல நாலு மாடு ஒற்றுமையா வாழ்ந்து
கொண்டிருந்ததாம். .என்ன கேட்குறியா ? .

ம். . . ம். . . ம். . .

ஒரு சிங்கம் வந்து மாடுகளைத் திங்கப் பார்த்துச்சாம். . .

ம். . . . ம். . . . ம். . . .

நாலு மாடும் சேர்ந்து சிங்கத்தை கொம்பால முட்டி மோதி ஓட ஓட விரட்டிடுச்சாம். .

ம். . . ம். . . ம். . .

ஒரு பொல்லாத நரி இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடனும்னு நினைச்சு . தந்திரம் பண்ணி மாடுகளுக்குள் சண்டை வரச்செய்து பிரிச்சி விட்டதாம். நாலு மாடுகளும் தனித்தனியா ஆகிடுச்சாம். . .

ம். . . ம். . . ம். . .

நரி உடனே போய் சிங்கத்தைக் கூட்டி வந்து வேட்டையாடச் செய்து தனித்தனியா இருந்த மாடுகளை சுலபமா அடிச்சி கொன்னுடுச்சாம்.
நரியும் மாடுஎளை திண்ணு ஏப்பம் போட்டுச்சாம்.

ம். . . . ம். . . . .ம். . .

என்ன ம். . . ம். . . . ம். . . . இதுலருந்து உனக்கு என்ன புரியுது. . . ஒற்றுமையே உயர்வு. .

ம். . ம். . . ம். . . .

சரி . .வேற ஒரு கதை சொல்றேன். .
ஒரு ஊருல ஒரு பாட்டி. . . .வடை சுட். . . . .

ஐய்யோ. . . .போதும் கமலாம்மா. .எனக்கு நெஞ்சே வெடிக்கிற மாதிரி அடைக்குது. . . இதுக்கு மேல என்னால தாங்க முடியல. . .

அய்யோ. . . அப்ப நான் யாரிடம் கதை சொல்லுறது. . எனக்கு கதை சொல்லனும் போல ஆசை ஆசையா இருக்கே. . . .

எனக்கும்தான் கமலாம்மா. . . . மீதி கதையை அதோ அந்த சரசம்மாளிடம் சொல்லுங்க. .
சரசம்ம்ம்ம்மா. . .

என்ன. . . பர்வதம்மா. . . .

எனக்கு அழுகையா வருது. . . கமலாம்மா சொல்லுற கதைகளைக் கொஞ்சம் கேளுங்க. .
நாளைக்கு என்னிடம் நீங்களும் கதை சொல்லலாம். . .

*-*-*-*-* *-*-*-* *-*-*-*-*

பின் குறிப்பு :-

கதைக் களம் = முதியோர் இல்லம்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (6-Aug-14, 11:54 am)
பார்வை : 312

மேலே