நான் பெற்ற பட்டம்

நான் பெற்ற பட்டம்

பள்ளி முடிந்த பரவசத்துடன்
பல லட்சங்களுடன் பவ்யமாய் சென்றேன்
கனவுகளுடன்
கல்லூரியின் காற்றை சுவாசிக்க

நாளும் வளர்ந்தது கூடவே மிக வேகத்துடன்
வளர்ந்தது -நண்பர்கள் கூட்டமும்
பிரிக்க முடியாத பிணையை - போல்

கல்லூரி முடிந்தது ஆனால் கனவுகள் மட்டும் - மீதம்
பட்டம் பெற்றேன் கூடவே துக்கமும் பெற்றேன்
நண்பர்களை பிரிந்து - இது இலவச இணைப்பாக


என் பெற்றோர்களுக்கு தெரியவில்லை -அந்த
பட்டம் பறக்க விட கூட பயன்படாது என்று
ஏக்கத்துடன் கேட்டார்கள் என்ன வேலை என்று
ஏமாளியை போல் நின்றேன் -பட்டம்
எனக்களித்த பெருமை இது

சென்னை சென்றால் சிறக்கலாம் என்றார்கள்
சென்றேன் அதையும் பார்த்துவிடுவோம் என்று -நின்றேன்
ஆவலுடன் பல அலுவலகத்தின் முன்
அங்கும் எனக்கு ராசி இல்லை போலும் அவர்களின்
ஒரே கேள்விக்கு பதில் இல்லாதவனாய் - "முன் அனுபவம் "


வெறும் கையுடன் வீட்டிக்கு வர மனமில்லாமல்
துணைக்கு தொல்வியெனை கூட்டி வந்தது .
அக்கம் பக்கத்தினரின் ஒரே கேள்வி -- ""வேலை ""
பெற்ற பட்டம் பேச கற்று கொடுத்தால் சமாளித்தேன்
இதற்கு என் பெற்றோர்கள் மட்டும் விதி விலக்கல்ல

சில நண்பர்கள் கூட விலகி விட்டார்கள் -அவர்கள்
நடிப்பில் சிறந்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை போலும்
அதனிலும் மேலாக பல நண்பர்கள் என்னுடன்
விலை இல்லா விந்தை மனிதர்கள் -அவர்கள்

பெற்றவர்களின் பாசம் கூட பெரிதாய் நிற்கவில்லை
என் கனவுடன் சேர்த்து அவர்களின் கனவையும்
எரித்தவன் பொறியியல் என்னும் புதை குழியில்
அவர்களுக்கு என்ன தெரியும் பாவம் -விவசாயம்
என்னும் உழைப்பை மட்டும் உயர்வாய் நினைப்பவர்கள்

முயற்சி எனும் ஒன்றை கையில் வைத்து திரிகிறேன்--இன்றும் .



இதற்கு நான் மட்டும் விதி விலக்கல்ல .....
என்னை போன்ற லட்சக்கணக்கான -இளைஞர்களும் .

எழுதியவர் : ந.செந்தில் கிருஷ்ணன் இளங்� (6-Aug-14, 7:04 pm)
Tanglish : naan petra pattam
பார்வை : 79

மேலே