காத்திருக்கிறேன்
சப்தமிட்டு வரும்
அலைகளில்
ஓசையைப் போல்
வெளிப்பட்டாலும்,
மௌனமாக இருந்து,
பிறகு
வெடித்து வெளிப்படும்
எரிமலையாக வெளிப்பட்டாலும்
சரி,
உன் உணர்வு வெளிப்பாடுகளுக்கு
காத்திருக்கிறேன்
மௌனமாக.........
நீ சொல்லும்
ஓர் வார்த்தைக்காக....!