காதல்
காதல் கவிதையில் பிறந்து
கண்களில் மலர்ந்து
வண்ணக் காவியமாய்
உயர்ந்து நின்று
உன்னதக் காதலர்களை தத்தெடுத்து
காதலின் பெருமையை
உணர்த்தும்
உண்மைக் காதலுக்கு
இனம் மதம் மொழி ஏழை பணக்காரன்
வித்தியாசம் எதுவும் கிடையாது
உண்மை அன்பு உள்ளம் கொண்டால்
உலகை வெல்லும் காதல்
எந்த உறவிலும் அன்பு தான்
ஆளும் சக்தி கொண்டது
அன்புக்கு ஈடு இணை இல்லை
காதல் அன்பினால் கட்டும் கோட்டை
அசைக்க முடியாத அடித்தளம் அன்பு
எதிர்ப்புகள் எதிர் கொண்டு வரினும்
தைரியம் கொடுக்கும் காதல்
காதல் மிக்க சக்தி கொண்டது
அதனால் தான் காதலர்களின் உள்ளங்கள்
வலிமை அடைகிறது
வலிமை உள்ள காதல்
விட்டு கொடுப்பதில்லை
சோந்து போவதில்லை
இது உண்மையான அன்பு காதலர்க்கே
இறைவன் கொடுக்கும் வரம்
உண்மைக் காதல் வாழ்க