இதுதானானே முதலிரவு
..."" இதுதானா(னே) முதலிரவு ""...
எதிர்பார்ப்பை விருந்தாக்க
எதிர்பார்த்தே காத்திருக்க
அழகிய எம் நினைவுபோலே
அந்திமாலை நாணித்திருக்க
தொடுவானமும் இருள் சூழ
தொடும்நேரம் நெருங்கிவர
இமையிரண்டும் இணைசேர
பட்டுக்கொண்டு களைப்புதீர
வெடவெடத்து கலைத்தவாறு
கலவியினில் இரு மெய்சேர
தோல்வியில்லா போர்க்களத்தில்
காயங்கள் சின்ன கவிதை சொல்ல
கண்கள் மெளனமாய் களைப்பாற
உறக்கமென்னும் மரணத்திற்கு
கனவுலகம் தன் வாயில்திறந்து
கம்பளம் விரித்தே வரவேற்க
விழிமூடிய சிறு விசும்பலோடு
விடைதரவே விருப்பமில்லாது
நெருக்கி நெஞ்சம் அணைத்தவாரு
விடியலை எதிர்தே போராட்டம்,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...