கரிசன களிம்புக்காரன்நீ
உன் விரலுக்குள் என் வாழ்வு
ஆம் , உன் அசைவுகளாலேயே
என்னை ஆட்டி வைக்கிறாய்
சிறு பூவாய் , பொருளாய்
உன் கைக்குள் அடங்கிவிடும்
ஏதோ ஒன்றாய் மாறி
உன் விரல்களுக்குள்
தஞ்சம் அடைந்து விட ஆசை.
எனது நடை வண்டி நீ.....
நான் நன்றாய் நடப்பவள் தான்
என்றாலும் வாழ்கையின்
மேடு பள்ளங்களில்
கைபிடித்து நடத்தி செல்பவன் நீ
கரிசன களிம்புக்காரன்..நீ .
மனதின் காயங்களுக்கு
மயிலறகு பார்வையால்
களிம்பு பூசிய கரிசனக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்..
என் சின்ன சின்ன
குறும்புகளையும்
தவறுகளையும்
செல்லமாய் தண்டித்தாய்
சிநேகமாய் கண்டித்தாய் !
என்னை வாழ்க்கை எனும்
ராட்டினத்தில் ஏற்றிவிட .