நண்பர்கள் அமைவது
பிரிகையில் சோகம்
அழுகையில் வேகம்
கண்ணீர் தீர்ந்து போகும்
தீயின்றி மனம் சாம்பலாகும்
ருசித்ததில்லை நண்பன் தருவதை தவிர
வேறு எந்த சோறும்
புகை பிடிக்க பழக தொடங்கும் போது
இன்னும் அந்த நிமிடம் நினைத்தால்
என் நெஞ்சில் புரையேறும்
அப்பாவின் அதட்டல் முகம்
தானாய் வந்து போகும்
எதிலும் சுவைதான்
எங்கும் சுவைதான்
நண்பர்கள் அமைவது
வாழ்வின் தனி கலைதான்