அப்பா --------அமரர் சுசீலா மணி நினைவுப்போட்டி ----

உன் விரல்களுக்குள் என் வாழ்வு......!
எனது நடை வண்டி நீ......!
கரிசன களிம்புகாரன் நீ.......!
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
உன் சந்தோசத்தை துண்டித்ததும் நீ......!

என் ஆசை சித்திரங்களுக்கு
வர்ணம் தீட்டுபவன் நீ.......!

என் கனவு பூக்களுக்கு
வாசம் தருபவன் நீ .....

எனக்கான உலகம்
உன்னிடமிருந்தே தொடங்குகிறது .......!

எனக்கான பயணம்
உன் பின்னே தொடர்கிறது.......!

என் நித்திரையில் தலைகோதும்
உன் விரல்களுக்குள்ளும் .......!
என் நெற்றியிலே முத்தமிடும்
உன் இதழ்களுக்குள்ளும் .......!
எனக்கான உன் பாசத்தை நானறிவேன்.......!

பண்டிகை நாட்களில்
பஞ்சம் காட்டாமல் வாழத்தெரிந்தவன் நீ.......!

பகைத்தவனுக்கும்
வஞ்சம் கட்டாமல் பழகத்தெரிந்தவன் நீ.......!

நான் படுத்துறங்கிய பஞ்சுமெத்தை
உன் மார்பு .......!
பசித்தவனுக்கும் பந்தியிடுவது உன் மரபு.....!

என் பிறப்பின் நெடுங்கனவு
ஒன்றே ஒன்றுதான் .......!
இளம்வயதில் உன் தோலேறி
பூமி பார்த்த எனக்கு ......!
உன் முதுவயதில் உனை தோலேற்றி
உலகம் காட்ட வேண்டும் அவ்ளோதான் .......!

எழுதியவர் : பாக்யா (10-Aug-14, 1:36 pm)
பார்வை : 104

மேலே