தருமம் நிலைத்திட
தருமம் நிலைத்திட .....
கண்ணில் நேசம் வேண்டும்;
கருணை உள்ளம் வேண்டும்;
கற்பனை நெஞ்சம் வேண்டும்;
காகிதமெல்லாம் உயிர்பெற
வேண்டும்.
எழுதுகோலுக்கு கவுரவம் வேண்டும்;
எழுத்தின் மகிமை ஊரறிய வேண்டும்;
எண்ணியதெல்லாம் நடந்திட
வேண்டும்;
எங்கும் சந்தோஷம் நிலைத்திட
வேண்டும்.
பணத்தின் பற்று குறைந்திட
வேண்டும்;
பாசமெனும் பண்பு உயர்ந்திட
வேண்டும்;
மண்ணில் நீதி வேண்டும்;
மனிதநேயம் மலர்ந்திட வேண்டும்.
அண்டைவீட்டாரோடு அன்பு
வேண்டும்;
அயலார் நெஞ்சமும் குளிர்ந்திட
வேண்டும்;
வாடிய முகத்தில் வசந்தம் வேண்டும்;
ஏழையெனும் ஏக்கம் மறைந்திட
வேண்டும்.
உண்ண உணவு அனைவருக்கும்
வேண்டும்;
உதவும் உள்ளம் அதிகம் வேண்டும்;
ஊரார் எல்லாம் உயர்வடைய
வேண்டும்;
உண்மை என்றும் ஜெயித்திட
வேண்டும்.
போட்டி பொறாமை அகன்றிட
வேண்டும்;
புன்னகை எங்கும் நிறைந்திட
வேண்டும்;
சூழ்ச்சிகள் மறைந்து சுதந்திரம்
வேண்டும்;
தந்திரம் மறைந்து தருமம்
நிலைத்திட வேண்டும்.