அறிவாயா நீ

அறிவாயா நீ....
அதிகாலைச் சூரியனை
அஸ்தமிக்கச் சொல்லும்
அழகான மழைக்காலம்...
கொட்டுகின்ற பனித்துளியை
ஒட்டிவைத்து பேசும்
குளிர்காலை வேளை....
எங்கோ விழுந்த மழைத்துழிகள்
ஏதோ சொன்னது என் காதில்..
எங்கோ உரசிய இளந்தென்றல்
ஏனோ தொட்டது என்னுடலை...
எங்கோ மலர்ந்த மல்லிகையோ
ஏனோ நிறைத்தது என் மனதை...
எங்கோ பாடும் இளங்குயில்கள்
ஏனோ சொன்னது உன் பெயரை...
உச்சரிக்க முடியாமல்
உடைந்து போனேன்
உன் நினைவில்....
உனக்கு தெரியுமா
இழப்பின் வலி என்னவென்று?
உனக்கு தெரியுமா
இதயத்தில் நீ பாய்ச்சிய ஈட்டியின்
வலி எப்படிபட்டதென்று?
புல்லில் கூட முள்ளின்
கொடூரம் உணர்கிறேன்...
நெல்லில் கூட நெருஞ்சியின்
வேகம் உணர்கிறேன்...
துக்கத்தை என்னுள் தக்கவைத்து
தூக்கத்தை கலைத்து விட்டாய்...
நிழலை என்னுள் தக்கவைத்து
நிஜத்தை தொலைத்திட செய்தாய்...
நொடிக்கொருமுறை
கரையை தொடத்துடிக்கும்
நுரை பொங்கும் கடலாய்
ஆர்ப்பரிக்கும் என்
இதயத்தை அறிவாயா நீ?