கனிவாய் நீ மொழிவாய்

..."" ""...

அகிலத்தின் அழகினை படரவிட்டு
ஆகாய அரங்கினை விரித்துவிட்டு
அன்பை நெருக்கி அணைத்துவிட்டு
ஆணவத்தை நெருப்பில் எரியவிட்டு
அறிவினை முறுக்கியே ஏற்றிவிட்டு
ஆசைக்கு முறையாய் தடைகளிட்டு
அமிர்தத்தை அளவாய் உண்ணவிட்டு
ஆயிரம் இன்பங்களை பெற்றுவிட்டு
அடைக்கலம் மெல்ல அரும்பவிட்டு
ஆருயிர் மென்மையாய் தழுவவிட்டு
பார்க்க அழகாய் பாசத்தின் மொழியாய்
கருத்தில் தெளிவாய் கருணை வடிவாய்
கவியின் கருவாய் உயிரின் உணர்வாய்
உன்னத நெறியாய் உள்ளத்தின் வழியாய்
நந்தவனத்து மலராய் மாங்கனி சுவையாய்
செதுக்கிய சிலையாய் கலையின் உருவாய்
பூவிதழின் சிரிப்பாய் உள்ளத்து சிறையாய்
உண்மை பொருளாய் காதலில் கனிவாய்
வாய்மொழி அழகாய் நீயிங்கு மொழிவாய்
கற்கண்டு இனிப்பாய் தித்திக்க செய்வாய்

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Aug-14, 8:31 pm)
பார்வை : 94

மேலே