சாலைகள்

"சாலைகள்"

நடு வகிடு
எடுத்ததை போல்
நெடுஞ்சாலை!!!

அது சிலருக்கு
சுகமான பயணங்களையும்,
சிலருக்கு கனமான
தழும்புகளையும்
தந்துள்ளது!!

உதாசீனத்தால்
உதிர்ந்த
உதிரங்களும்,
நசுங்கிய
நரம்புகளும் ,
நய்ந்து போன
தசைகளையும் ,
தன் மேல் பூசி
கொண்டுள்ளது!!

பெட்ரோல் அருந்திய
என்ஜின்கள் விடும்
ஏப்பத்தை
சுவாசிக்கிறது!!

கோபத்தையும்
ஏக்கத்தையும் பெட்டி
பெட்டியாய் சுமந்து
செல்லும்
மனிதர்களும்,
அவர்களை சுமந்து
செல்லும்
பெட்டிகளையும் ,
தடம் பதிய
விட்டுள்ளது.

இதன் வருகையால்
பல பூர்வீகங்கள்
விலை
பேசபட்டுள்ளது,

சிலரிடம் பிடுங்கி ,
பலருக்காக
போடப்பட்ட
ஒரு சமுதாய
சமன்பாடு!!!

இதில் குஜராத்
காரரும்
பயணிக்கலாம்,

குப்பனும் சுப்பனும்
பயணிக்கலாம்,

ஈ கிளாஸ் பென்சும்
பயணிக்கலாம்,

ஈ எம் ஐ-ல
வாங்குன
வண்டியும்
பயணிக்கலாம்,

நீ தினம் பயணிக்கும்
சாலையில்
இன்று புதிதாக
எச்சரிக்கை
பலகையோ
வேகத்தடையோ
பூத்துள்ளதா???
அப்படியானால்
நேற்று
ஒரு உயிர்
மாண்டுள்ளது!!!

திறந்தபடியே இருந்த
பாதாள சாக்கடை
மூடபட்டுள்ளதா???
திறந்துபார்
உள்ளே ஒரு
குரல் கேட்கலாம்!!!

விபத்துக்கள் ,
அனைவரும்
வேடிக்கை
பார்க்கும் காட்சி
பொருளாகவே
உள்ளது,

சாலைகள் ,
விபத்துகளால்
அடுக்கி நிரம்பிய
அலமாரியாகவே
உள்ளது,

வேகம் எல்லை மீறும்
போது
எச்சரிக்கை
பலகைக்கும்
வேகத்தடைக்கும்
விலையாக
பேசபட்டுவிடுவோம்!!

எழுதியவர் : (13-Aug-14, 8:07 am)
Tanglish : saalaigal
பார்வை : 67

மேலே