பரிசு

நீ என்னை பார்க்கும்போதெலாம்
மௌனங்களை மட்டுமே
வார்த்தைகளாக தருகிறாய்

உன் மௌனங்களை
அள்ளிக்கொண்டு வந்து
சேமித்து வைக்கிறேன்
சேமிப்புகலனில்

நீ என் காதலை
அங்கீகரிக்கும் போது
உனக்கு பரிசாக தரலாம் என்று

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (13-Aug-14, 12:12 pm)
Tanglish : parisu
பார்வை : 106

மேலே