எதற்காக

தான் பிள்ளை தப்பு
செய்யும் பொழுது
தட்டிக் கேட்கும் இவர்கள்
மாற்றான் பிள்ளை
தப்பு செய்யும் பொழுது
பொழுது போக்காய் இருக்கின்றார்கள்
ஏன் இப்படி இவர்கள்......?
தட்டிக் கேட்டால் மட்டும்
இவர்கள் திருந்தி விடுவார்களா....
என்ற எண்ணமா......?
அல்லது
திருந்தி விடுவார்கள்
என்ற பயமா.....?
இல்லை என்றால்
இவர்கள்
மாற்றான் பிள்ளை
மனப் படைத்தவர்களா....?

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:56 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : etharkaaga
பார்வை : 88

மேலே