காதலிக்க ஆசை
சிறு நதியாய்ப் பிறப்பெடுத்து
வழியெல்லாம் பூக் கொய்து
கடற்கரையில் அதைக்கொட்டி
அலைகடலாய்க் காதலிக்க
கொள்ளை ஆசை
செந்தீயை அணைக்கும்
சிறு நீர்த்துளியாய் உருமாறி
உனைக் காதலிக்க வேண்டும்
உலகின் அனைத்து
உயிர்களிலும் குடிபுகுந்து
காதல் உறவாட
ஓர் ஆசை
உன் பார்வைப் பொறியில்
முற்றும் பற்றி எரிந்திட
உருகும் மெழுகாய்
நானாக வேண்டும்
கரைகொள்ளாக் காதலினால்
உடையும் நொடிகளின்
கண்ணீர்ச் சிதறல்களின்
ஓரணுவில் சூல் கொள்ள ஆசை
உள்ளங்கையில் காதல் ஒளித்து
வைத்து நத்தைக் கூடொன்றில்
நாம் வசிக்க வேண்டும்
உன் விழிச் சாரலில்
என்னை நனைத்து
குடையாக நீ
உன் இமைகள் பரிசளிக்க
காதல் தூவும் பொற்கணத்திற்காக
உன்னை
ஒரே ஒருமுறை
காதலிக்க வேண்டும் நான் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
