எப்படி கேட்க எனக்காய் ஒரு இடம் கேட்க

ஆயிரம் ஆண்களில் அவன்
மட்டும்தான் அழகானவன் !
அதிகம் பேசாத அவன்
இதழ்களுக்கு பதில்
அதிகமாய் பேசுகிறது
அவன் கண்கள் !
அவன் வைத்த தாடி காதல்
தோல்வியால் அல்ல
காதலைத் தோற்கடிக்க !
காற்றில் வரும் மலரின்
வாசம் போலிருந்திருக்கக்
கூடாதா என் நேசம் !
அறியாமல் இருந்திருக்கிரேனே
நான் மலர்ந்து நாளான பின்னும்
என் காதலை !
எப்படி கேட்க எனக்குள் இருக்கும்
அவனுக்குள் எனக்காய்
ஒரு இடம் கேட்க !