திரும்பி பார்த்தேன்

தந்தை தோளின் உயர்வு.,
அன்னை தாலாட்டில் தூக்கம்..
பாட்டி கதையின் கற்பனை.,
தாத்தா கைத்தடியின் ஊக்கம்..
தோழன் தந்த காயம்.,
அந்த காயம் தந்த நெருக்கம்..
தோழி அவள் கை பிடிக்க.,
அவள் கண் கண்ட வெட்கம்..
இன்னும் எதை எல்லாம் இழப்பாய்??
மடிகணினியை மடி.,
சேர் உந்தன் தாய் மடி.,
முடிந்தால்,
அதோடு கொஞ்சம்.,
தமிழ் படி..