முதல் சந்திப்பு
மிண்வெட்டை போல அறிவிக்காமல் வந்த அழைப்புமணி அவளை
நொடிப்பொழுதில் நுழைய விட்ட இதயம்..
RDX வாய்த்த பாறை போல் இதயம் தூள் தூளாய் சிதறும் போது
வேடிக்கை மட்டும் பார்த்த கண்கள்..
பத்து மில்லி எச்சில் பகிர பக்குவமில்லாமல்
சண்டை போட்டு நஷ்டம் கண்ட உதடுகள்..
தெற்கு மேற்கு திசை மறந்து அவள் நிழலே
வழியென நடந்த கால்கள்..
நல்லது சொன்ன நண்பனை தவிர்த்து
அவள் செருப்பொலிக்கு மயங்கும் செவிகள்..
இப்படி என் உடலே எனகேதிரே சதி செய்ய,
ஒரு நொடியில் பூத்த
ஒருநூறு கவிதைகளில்
ஒன்றை கூட உளறாமல் சமாளித்தான்
என் நண்பன் நாக்கு..