நிலா முற்றம்-3-----------அஹமது அலி------

பால் சொட்டும் பருவ நிலா
தாழ் முட்டும் காமன் விழா
விழி ரசம் பருகியபடி
மொழி மறந்தேன் உன் மடி....
"
"
குத்தால மலை அருவி
குளிக்குது ஓர் குருவி
நானுன்னை நெருங்கி
குளிக்கிறோம் நனையாமலே...
"
"
மொட்டை மாடித் தூக்கம்
ரெட்டை உயிரின் ஏக்கம்
நட்ட நடுச் சாமக் குளிரை
ஒற்றைப் போர்வை சுட்டது....
"
"
விண்மீன்கள் மிதக்கும் சாலை
மின்மினிகள் அலையும் சோலை
கண்மணியின் கரு மையில்
என் மேனி ஒளிர்கிறது.....
"
"
கோடை கால நேரம்
ஓடைக் கரை ஓரம்
கயல்கள் துள்ளும் கோலம்
புயல் கடந்திட கரங்களே பாலம்....
"
"
தொட்டாச் சினுங்கித் தோட்டம்
பட்டாம்பூச்சிக் கூட்டம்
தொட்டால் சினுங்கி-மூச்சு
பட்டால் பறக்கிறோம்....

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Aug-14, 9:06 am)
பார்வை : 536

மேலே