நிரந்தர மரியாதை

நிரந்தர மரியாதை

துடைப்பத்துக்கு மரியாதை
செருப்புக்கும் மரியாதை
அரசியல் கட்சிகளின்
சின்னங்களாய் ஆனதால்.

செருப்பையும் துடைப்பத்தையும்
தூக்கிப்பிடித்து ஆட்டி
வாக்கு கேட்க வந்தபோதும்
மரியாதை குறையவில்லை.

முறம் மட்டும் மரியாதையின்றி
ஒதுங்கியே கிடக்கும்நிலை
எந்தகட்சித் தலைவரும்
முறத்தையின்னும் மதிக்கவில்லை.

காதலுக்கு மரியாதை
திரைப்படத்தில் கிடைத்தபின்னெ
அதற்கும் மரியாதை
அளவின்றிக் கிடைக்கிறது.

வதந்திக்கு மட்டுமே
நிரந்தர மரியாதை
ஊர்வம்பில் திளைப்பவர்கள்
இருக்கும் இடமெல்லாம்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (16-Aug-14, 10:23 pm)
பார்வை : 1445

மேலே