காசு இல்ல ஆனே லூசு

#கானா #

காசு இல்லா நா இந்த உலகத்துலே
தூசா கூட மதிப்பே இல்ல

நா லா ஒரு ஆளா
நின்ன தனி ஆளா

காசு இல்ல உலகத்துலே மதிப்பேயில்ல

காசு இல்ல அய்யோ ஆனா லூசு
நா சொல்ற கதைய கேளு
என் பாசு

உப்பு இல்லா சோத்த போல
தப்பு தப்பா ஆனேன் மெல்ல
என் வாழ்க்கை வடை
விட்ட நூல போல
அய்யோ காசு இல்ல
நா ஆனேன் லூசு

காசு என்ன கடவுளா டா
காசு இல்லா நா தெருவோ டா
கரன்சி கண்டா கரண்ட புடிக்குறான்
என்ன லாம் எங்க மதிக்கிறான்
காசு இல்ல ஆனேன் லூசு

சம்பளத்த பாத்து சம்பந்தம் பன்றான்
சாக்கடை யானும் மோந்து நிக்றான்
காசு காரணம் காசு

அவன் செஞ்சா ரைட்டு
நா செஞ்சா தப்பு
போட்டானே புது வேட்டு
காரணம் நோட்டு
காந்தி தாத்தா போட்ட நோட்டு

காதலிச்சவளே காரி மூஞ்சி டா
என் இதயம் காதல் இல்லா சுவர்
காரணம் நா காசு இல்லா
வெத்து கவர்
காசு அய்யோ நோட்டு
காந்தி போட்டோ நோட்டு

காசு இல்லா நா இந்த உலகத்துலே
தூசா கூட மதிப்பே இல்ல

எழுதியவர் : கிருஷ்னா (17-Aug-14, 9:05 am)
பார்வை : 180

மேலே