வெட்க ஆடை - சந்தோஷ்

மதுவிழியில் எழுந்த புதுவழி
புதுவழியில் எழுதிய புதுவரி
புதுவரியில் மலர்ந்த காதல்கொடி
காதல்கொடியில் பறந்த காமநெடி
காமநெடியில் சிலிர்த்த காதலி
காதலில் புகுந்த காதலன்
காதலனாய் சில்மிஷித்த நான்.
நானாக நானில்லாத இந்தநிமிடம்.

இதுப்போதுமே.. இதுப்போதுமே..
என்பவளே..!
இதுப்போதுமா இதுப்போதுமா
என்னவளே?

இது தீராப்பசி......!
இது தீர்க்கப்படவேண்டிய ருசி..!

வா...அன்பே...வா..!
அதோ அந்த காமதேசத்தில்
நமக்கான காதல்மெத்தையில்
முதலிரவு ஒன்று காத்திருக்கிறது...

கூடி கலைப்போம் வா
வெட்க ஆடைகளை..!


-------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Aug-14, 3:01 pm)
பார்வை : 211

மேலே