என் ஆசைகள்

என் கண்கள் என்றும்
உன்னையே காண ஆசை
உன் கண்கள் என்றும்
என்னையே காண ஆசை
என் காதுகள் உன் குரல்
கேட்க ஆசை
உன் கால் கொலுசின் ஓசை என்றும்
கேட்க ஆசை
உன் புருவங்களின் புன்னகையை
ரசிக்க ஆசை
மிரட்டும் உன் விழிகளிடம்
பணிய ஆசை --நான் பணிய ஆசை
ஆசை நோய்கள் ஆயிரம்
என்னிடம் உண்டு
அன்பே உன் ஒற்றைச் சொல்லே
அதற்கு மருந்து
காற்றில் உன் சுவாசம்
கண்டு பிடிக்க ஆசை
உன் சுவாசமாக நானுமே
மாற ஆசை
கைகள் உன் அன்புக்கரம்
பிடிக்க ஆசை
உன் விழியில் நீர் வழிந்ததால்
துடைக்க ஆசை
கைவிரல் உன்முகம்
வரைய ஆசை
உன் அழகினிலே உலகத்தையே
மறக்க ஆசை
உன் கூந்தலை என் போர்வையாக
மாற்ற ஆசை
உன்னைப் போர்த்திக் கொண்டு நானுமே
தூங்க ஆசை
ஆசை நோய்கள் ஆயிரம்
என்னிடம் உண்டு
அன்பே உன் ஒற்றைச் சொல்லே
அதற்கு மருந்து
வெண்ணிலா உன்னை நான்
சுமக்க ஆசை
சுமந்து கொண்டு உலகத்தையே
சுற்ற ஆசை
உன் கருவிழிகளில் என்முகம்
காண ஆசை
உன் இதழின் அமிர்தம் உண்டு நாளும்
வாழ ஆசை
பறந்து செல்லும் பட்டமாக
மாற ஆசை
பறந்து முடிந்தவுடன் உன்மடியில்
இளைப் பார ஆசை
ஆசை நோய்கள் ஆயிரம்
என்னிடம் உண்டு
அன்பே உன் ஒற்றைச் சொல்லே
அதற்கு மருந்து
கால்கள் என்றும் உன்னையே
தொடர ஆசை
தொடரும் போது உந்தன் கால்கள்
உரச ஆசை
உன் பாதம் ரெண்டும் முள்படாமல்
காக்க ஆசை
முள்பட்ட இடம் ரெத்தம் வந்தால்
சுத்தம் செய்ய ஆசை
என் முத்தத்தாலே
சுத்தம் செய்ய ஆசை
உன்மனம் என்மனம்
சேர ஆசை -நாம்
சேர்ந்த பின்பு பிரிந்திடாமல்
வாழ ஆசை
பிரிந்தாலும் மறவாமல்
நினைக்க ஆசை
உன்னை மறந்த நொடி மரணம் என்னைச்
சேர ஆசை
ஆசை நோய்கள் ஆயிரம்
என்னிடம் உண்டு
அன்பே உன் ஒற்றைச் சொல்லே
அதற்கு மருந்து
என் ஆசை நோய்கள் அத்தனையும் சொல்லிவிட்டேன்
என்னைப் பிடிக்கும் என்று மட்டும் சொல்லி விடு
சொல்லிவிடு --நீ
சொல்லிவிடு