மழை நாள்
மழை நாள் !
என்றுமில்லாத
புதியதொரு வலி
என் உடல் முழுதும்
பரவுகின்றன !
இதுதானா ! இதுதானா!
காதலின் வலி இதுதானா !
நான் தேடி தேடி
அலைந்த சுகங்களை
இன்று என்னுள்
அள்ளி அப்பி
நிற்கின்றது காதல் !
கடந்து வந்த பாதையில்
என் கண்ணீரை துடைக்க
ஒரு பெண் கைகளும் இல்லை !
என் உணர்வுகளை
ஒரு பெண்ணும் தயாராக இல்லை !
தாயின் வாசனை தவிர
வேறு ஒரு பெண்ணின் வாசம்
என் மீது படரவே இல்லை !
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றார்கள் !
தட்டி தட்டி
ஒய்ந்து போனான்
திறக்கவில்லை
ஒரு காதல் கதவும் !
பெண்கள் பலர் ஒன்று கூடி
தீர்மானம் இட்டனர் !
எவரும் என்னை
காதலிக்க கூடாது என்று !
அதில் அவள் மட்டும்
விதிவிலக்கனால் !
கைகளில் மந்திரகோளோடு
என் வாசல் வந்த தேவதை அவள் !
இந்த வண்டினைஉம்
தேன் எடுக்க அனுமதித்த
பெண்பூ அவள் !
நிராகரிப்பால்
அவதிப்பட்ட எனக்கு
அவள் பார்வையால்
புது வாழ்வு பிறந்தது !
மழை நாட்களில்
நிரம்பும் நதியை
என் மனம் முழுதும்
நிறைகிறது காதலின் வாசனை !
அவளால் !
-பா. விக்னேஷ்