என்ன இந்த மாற்றம்

என்ன இந்த மாற்றம் என்னுள்,
என்ன இந்த மாற்றம்
உன்னைக் கண்ட நாள் முதல்
என் இதயம் அறிந்திட துடிக்குதே...
எதனால் இந்த மாற்றமோ
என் இதயம் அறிந்திட துடிக்குதே...
இன்னும் என்ன மாற்றமோ.......
நெஞ்சக் கூட்டுக்குள்ளே நீ நிழலாய் வந்ததால்
என் நிழலிலே மாற்றம்,
கார்குழல் கண்கள் விடாது தொல்லை செய்ததால்
என் தூக்கத்திலே மாற்றம்,
நீ வீசிய மழைச்சாரலில் தாகம் அடங்கியதால்
என் தாகத்திலே மாற்றம்,
கருங்கூந்தல் காற்று உடலில் தொட்டதால்
என் தேகத்திலே மாற்றம்,
அந்த கூந்தல் காற்றே
என் மூச்சுக் காற்றாய் போன மாற்றம்,
என்ன இந்த மாற்றம்
என்ன இந்த மாற்றம்
என் இதயம் அறிந்திட துடிக்குதே...
எதனால் இந்த மாற்றமோ........
உன் உதட்டோர சிரிப்பில்
என்னை மறந்து போனதால்
என் நினைவிலே மாற்றம்,
நீ கண்ணக்குழியில் இட்ட முத்தத்தில்
மயங்கி விழுந்ததால்
என் கனவிலே மாற்றம்,
பொன் கால் கொலுசின் ஒலியை
சங்கிதமாய் இரசித்ததால்
என் மனதிலே மாற்றம்,
உனது இதய துடிப்பில்
எனது இதயம் துடித்ததால்
என் உயிரிலே மாற்றம்,
அந்த இதய துடிப்பே
என் காதல் துடிப்பாய் போன மாற்றம்,
என்ன இந்த மாற்றம்
என்ன இந்த மாற்றம்
என் இதயம் அறிந்திட துடிக்குதே... எதனால் இந்த மாற்றம்,
என்ன இந்த மாற்றம்
உன்னைக் கண்ட நாள் முதல்
என் இதயம் அறிந்து சொன்னதே...
காதல் வந்த மாற்றமே
என் இதயம் தெளிந்து சொல்லுதே...
இது காதலின் மாற்றமே......

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-14, 10:02 am)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : yenna intha maatram
பார்வை : 107

மேலே