+விபத்து+

இரு நிமிடத்திற்கு முன்பு
பயணியாக பயணம் செய்தவர்
இப்போது நினைவுகளின்றி நோயாளியாகிப் போனார்...

அழகான காலைக் காற்றில்
திரையிசைப் பாடலை ரசித்துவந்தவர்
அவசரஊர்தி ஓசையில் மருத்தவமனை நோக்கி...

மின்னலாய் பறக்கும் விரைவுவழிச்சாலை
ஏனோ இப்போது அமைதியாய்
சிரிப்பைத் தொலைத்த சிலர் அங்குமிங்குமாய்...

தூக்கி எரியப்பட்ட பயணமூட்டைகளில்
சிலசொந்தங்களின் அன்பும் விரோதமும்
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன மூச்சுவாங்கியபடி...

சிலரின் குருதியுண்ட திருப்தியில்
வாகனமும் சாலையும் சாந்தமாகவும்
மாலைச்செய்தி தரும்பத்திரிக்கை பரபரப்பாகவும் காட்சியளித்தன...

விபத்து யாருக்கும் வேண்டாம்
விதிகளை மதிப்போம் மனிதனாக‌
விபத்தின்றி பயணிப்போம் வேகம் தவிர்ப்போம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Aug-14, 7:25 am)
பார்வை : 820

மேலே