மழலை

முகத்திற்கு முன் ஒன்றும்
முதுகிற்கு பின் ஒன்றும்
அறியாத ஒன்றன்றோ - உன்
அற்புத பொன் சிரிப்பு

கண் அருகில் காணும்
காட்சிகள் அறிகிலர் ஆரும்
கல்லில் ஊரும் எறும்பை
கவி தோற்க இரசிக்கும் - உன்
கருவிழிகள் இரண்டும்

உன் திசை இருப்போர்கெல்லாம்
அன்பு இசை கொண்டோர்க்கெல்லாம்
வன் பசி போகுமல்லோ - உன்
வளர்மிகு கன்னம் காண

குட்டி நாயுடனே குட்டி கதை பேசுவாய்
கள்ள காக்கையுடனே கண்ணாமுச்சி ஆடுவாய்
காரணமின்றியே காற்றுடன் காதல் கொள்வாய்
கண்களை சிமிட்டியே கல்லுளம் கரைத்திடுவாய்

எழுத்திலா மொழிகளிலே
உன் மொழி சிறந்து தன்றோ
கடவுளுக்கும் ஆசைவரும் - உன்
மழலை மொழி கற்பதற்கே

எழுதியவர் : ஷர்மா (22-Aug-14, 11:06 am)
Tanglish : mazhalai
பார்வை : 300

மேலே