அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அழகான வாழ்க்கையென்றதும்
நாம்! தேடத்தான் செல்லுகிறோம்……..
தோணுவதில்லை நாம் வாழ்கிறோமென்று......

சிறுப்பூக்களில் தேன் பருகுவதும்.....
சிலந்திப் பூச்சியின் கூட்டை இரசிப்பதும்.....
வாய்க்கால் நீரில் கால் நனைப்பதும் ………
அழகான வாழ்க்கைதான்.....

நண்பியின் கரம்பிடித்து நடப்பதும்......
நண்பனின் தோள் சாய்வதும்....சிறு
இரகசியமானாலும் பகிர்ந்துக்கொள்ளுவதும்....
அழகான வாழ்க்கைதான்.....

மழையில் நனைவதும்......
மழலையுடன் மகிழ்வதும்.....
மனம் விட்டு பேசுவது கூட....
அழகான வாழ்க்கைதான்.....

பள்ளிகூடத்திற்கு கடைசி செல்வதும்.....
பள்ளி முடிந்து முதலில் வருவதும் கூட
அழகான வாழ்க்கைதான்.....

தாயின் கையால் காப்பி பருகுவதும்.....
தாரத்தின் கையால் உணவு உண்பதும்.....
தமையனின் கையால் பரிசு பெறுவதும்....
அழகான வாழ்க்கைதான்.....

மனைவி தலைக்கு பூக்கள் சூடுவதும்... உன்
போல் மலரில்லையென பாக்கள் படுவதும்......
அழகான வாழ்க்கைதான்.....

நரைமுடி ஆங்காங்கே தெரிவதும்.......
வாலிபம் பறிபோனதாய் பதறிபோவதும்கூட
அழகான வாழ்க்கைதான்.....

நம் தந்தை, கரம்பற்றி நடப்பதும்....
நம் பிள்ளை, நம் கரம்பற்றி நடப்பதும்....
அவன் பிள்ளை, அவன் கரம்பற்றி நடப்பதும்....
அழகான வாழ்க்கைதான்.....

இப்படி,
அழகான வாழ்க்கை ஆயிரமிருக்கு......
ஆனந்தமாய் நடத்திப்போக.......

எழுதியவர் : Nathinan (22-Aug-14, 11:11 am)
பார்வை : 154

மேலே